For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குமரி கடலில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!

10:55 AM Jun 20, 2024 IST | Web Editor
குமரி கடலில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்
Advertisement

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது. ஆனால் திருவள்ளுவர் சிலை அருகே அலையின் தாக்கம் அதிகம் இருக்கும் காலங்களில் அங்கு படகுகள் செல்வதில்லை.

இரு பாறைகளையும் இணைக்க, 37 கோடி ரூபாயில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக கடலில் 27 அடி உயரத்தில் துாண்கள் நிறுவப்படுகின்றன. புதுச்சேரியில் இணைப்பு பாலத்திற்கான கூண்டு ஸ்டெய்ன்லெஸ் கம்பிகள் வடிவமைத்து தயாரிக்கப்படுகிறது.

இக்கூண்டின் எடை, 222 டன். 101 பாகங்களாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. கூண்டில் தற்போது வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருவதாகவும் இது முடிந்தவுடன் கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கூண்டு ஆர்ச்சை துாக்கி வைத்து இணைக்க திருவள்ளுவர் சிலையில் பெரிய கிரேன் நிறுவப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கூண்டுகள் இங்கு கொண்டுவரப்பட்டு இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement