"அன்பின் மொழியை அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்" - அன்னையர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
அன்னையர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10:10 AM May 11, 2025 IST | Web Editor
Advertisement
அன்பு என்றாலே அம்மாதான். அவர் தங்கள் குழந்தைகள் மீது காட்டும் சுயநலமற்ற அன்பு, அவரின் தியாகம் மற்றும் அரப்பணிப்புகளை போற்ற தினமும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும். இருப்பினம் தாய்மார்களின் தியாகத்தை போற்றவும், அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் அன்னையர் தினத்திற்கு ஒருநாள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
Advertisement

இந்த நாளில் தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக பரிசளிப்பது, அவர்களை பொழுதுபோக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், அன்னையர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) May 11, 2025
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்!
அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்! தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த
அன்னையர் தின நல்வாழ்த்துகள்!"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.