டெல்லி கார் வெடி விபத்து : 10 பேர் உயிரழப்பு என தகவல்..!
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் : 1 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தொடர்ந்து அந்த கார் தீயினால் வெடித்துள்ளது. இதனால் அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் அலறியடித்து தப்பியோடினர். சம்பவம் நடைபெற்ற இடம் கார் வெடிப்பு நடந்த இடம் பிரதான மார்க்கெட் பகுதியாகும்.
இதனை தொடர்ந்து மாலை 6.55 மணிக்கு டெல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக 7 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து FSL, NIA உள்ளிட்ட அமைப்புகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. காயமடைந்தவர்கள் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.