அரசு பேருந்தில் செயின் பறிப்பில் முயன்ற பெண் - போலீசாரால் கைது !
நாகர்கோவில் அரசு பேருந்தில் செயின் பறிப்பில் முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் செல்லும் அரசு பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்த பால்பண்ணை பகுதியில் ஒரு பெண் பயணி பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது கூட்டஅதிகமாக இருந்ததால் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்துள்ளார். இதை கண்ட மக்கள் நகையை பரித்த பெண்யை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
அந்த பெண் தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளார் பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர் .பெண்ணிடம் இருந்து நகையை மீட்டதோடு அரை மணி நேரத்துக்கு மேலாகியும் போலீசார் வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் சம்பவம் நடைபெற்ற பேருந்து எங்கள் எல்லை பகுதியில் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.இதையடுத்து மற்றொரு காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீசாரும் தங்கள் எல்லையில் வரவில்லை என கூறி விசாரணை செய்ய மறுத்தாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வடசேரி காவல் நிலைய போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை வடசேரி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா என அவர் பொய்யான தகவல்களை கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.