Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஜராத்தின் மெட்ரோ பாலம் என வைரலாகும் படம் - தற்போதையதுதானா? | #FactCheck

06:01 PM Nov 27, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by PTI

Advertisement

 உடைந்த பாலத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இது குஜராத் மாநிலத்தில் உள்ள மெட்ரோ பாலம் என பகிரப்பட்டது. நவம்பர் 20 அன்று, பேஸ்புக்கில் ஒரு பயனர் இந்த படத்தை பகிர்ந்தார். அதன் கேப்சனில் “குஜராத் மாநிலத்தில் உள்ள மெட்ரோ பாலத்தின் நிலை என்ன என்பதைப் பாருங்கள். அது இடிந்து விழுவதற்கு தயாராக உள்ளதை பாருங்கள்” எனவும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இதேபோல மற்றொரு ஃபேஸ்புக் பயனரின் பதிவில் , “குஜராத் மாநிலத்தில் மெட்ரோ பாலத்தின் நிலை இப்படியா? இந்தப் பாலமா 100 ஆண்டு உத்தரவாதத்தை தரப்போகிறது. புதிய தொழில்நுட்பம் வருகிற காலத்தில் எவ்வளவு அற்புதமான பாலத்தை பாருங்கள்” என இடம்பெற்றிருந்தது. இதுகுறித்த உண்மைத் தன்மைய ஆராய்வோம்.

 பி.டி.ஐ உண்மைச் சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான படத்தை கூகுள் லென்ஸ் மூலம் தேடியபோது யுவராஜ் சிங் மான் என்ற 'X' பயனரின் கணக்கில் இந்தப் படங்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. அவர் அக்டோபர் 23, 2023 அன்று ட்விட்டரில் பதிவிட்டு "குஜராத் மாநிலம் பலன்பூரில் கட்டுமானத்தில் இருக்கும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த புதிய காட்சி." இவ்வாறு எழுதினார்.

இப்படத்தையும் , வைரலான புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டு புகைப்படங்களும் ஒரே இடத்திலிருந்து வந்தவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கூகுளில் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை தேடியதில், இந்த சம்பவம் தொடர்பான பல பழைய ஊடக அறிக்கைகள் கிடைத்தன. ஏபிபி நியூஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தின் பலன்பூர் நகரில் ஆர்டிஓ சோதனைச் சாவடி அருகே கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண்களில் 6 கான்கிரீட் அடுக்குகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் இறந்த சம்பவம் நடந்துள்ளது.

இதேபோல பாலன்பூரில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது தொடர்பான செய்தி பல்வேறு இணையதளங்களில் வெளியானது. இங்குள்ள லிங்கை  கிளிக் செய்வதன் மூலம் தொடர்புடைய செய்திகளைப் படிக்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் மெட்ரோ கட்டுமானப் பணியின் போது, ​​அருகில் உள்ள கட்டிடத்தின் மீது கிரேன் விழுந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. எனினும் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில், இந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி, குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற இடத்தில் புல்லட் ரயிலுக்காக கட்டப்பட்டு வரும் பாதையில் பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மெட்ரோ பாலத்துக்கும் சம்பந்தமில்லை. 

எனவெ உண்மை சரிபார்ப்பில் வைரலான படம் சமீபயத்தியது அல்ல என்றும் அக்டோபர் 2023 இல் எடுக்கப்பட்ட படம் என்பது தெளிவாகிறது. அப்போது குஜராத் மாநிலம் பலன்பூர் நகரில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பயனர்கள் இப்போது தவறான தகவல்களுடன் இதனை பரப்புகின்றனர்.

முடிவு :

வைரலான படம் சமீபத்தியது அல்ல, எனவும் அக்டோபர் 2023 இல் வெளியான பழைய படம் என்றும் உறுதியாகிறது. அந்த நேரத்தில், குஜராத்தின் பலன்பூர் நகரில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் இறந்தார். பயனர்கள் இப்போது தவறான தகவல்களுடன் இதனை பரப்புகின்றனர்.

Note : This story was originally published by PTI and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Bridge collapseGujaratMetro Bridgeviral image
Advertisement
Next Article