அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (டிச. 19) கடுமையாக சரிந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து முதல் முறையாக ரூ.85ஐ தாண்டியது. ரூபாய் மதிப்பு சரிவின் வேகம் சமீபகாலமாக வேகமெடுத்துள்ளது. நேற்றைய வணிக நேர முடிவில் 84.94 காசுகளாக இருந்த நிலையில், இன்று 14 காசுகள் சரிந்து 85.08 காசுகளாக அதிகரித்துள்ளது.
ரூபாய் மதிப்பு 84 ரூபாயிலிருந்து 85 ரூபாய்க்கு மிகக் குறுகிய காலத்தில் சரிந்துள்ளது. இதற்கு முன்பு ரூ. 83-லிருந்து ரூ. 84-க்கு வர 14 மாதங்கள் ஆனது. ரூ. 82-லிருந்து ரூ.83க்கு வர 10 மாதங்கள் ஆனது. இன்று இந்தியா மட்டுமல்லாமல் மற்ற ஆசிய நாடுகளின் நாணயங்களும் சரிவை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பைப் போன்று கொரியாவின் வோன், மலேசியாவின் ரிங்கிட், இந்தோனேஷியாவின் ருபியா ஆகியவை 0.8%-1.2% வரை சரிந்தன.