"ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது" - முதலமைசர் மு.க.ஸ்டாலின்!
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போர் ஏற்பட்டது. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக இந்தியா கடைபிடித்து வருகிறது. மேலும் கார்கில் போரில் வெற்றி பெற்ற தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
அதன்படி ஜூலை 26ம் தேதியான இன்று கார்கில் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
On this #KargilVictoryDay, tribute to the brave soldiers who defended our motherland with unmatched courage and laid down their lives.
Their valour and sacrifice will never be forgotten. pic.twitter.com/xG4Oqh4b9t
— M.K.Stalin (@mkstalin) July 26, 2025
"கார்கிலில் தாய்நாட்டை பாதுகாத்து, தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.