For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலஸ்தீனம் ஐநா உறுப்பினராகும் தீர்மானம் - நிராகரித்தது அமெரிக்கா!

01:10 PM Apr 20, 2024 IST | Web Editor
பாலஸ்தீனம் ஐநா உறுப்பினராகும் தீர்மானம்   நிராகரித்தது அமெரிக்கா
Advertisement

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தில் ‘ரத்து’ அதிகாரத்தின் மூலம் உலக அமைப்பில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா  நிராகரித்தது.

Advertisement

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனத்தையும் இணைப்பதற்கான வரைவுத் தீா்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்டது.  அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட அந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக,  கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளில் 12 நாடுகள் வாக்களித்தன.  பிரிட்டனும் ஸ்விட்சா்லாந்தும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

எனினும்,  தீா்மானத்தை தனது சிறப்பு ‘வீட்டோ’ அதிகாரத்தைக் கொண்டு அமெரிக்கா ரத்து செய்தது.  அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஐ.நா. பொதுச் சபையின் 194-ஆவது உறுப்பு நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.  தற்போதைய நிலையில் ஐ.நா. பொதுச் சபையில் பாா்வையாளராக மட்டுமே பாலஸ்தீனம் இருந்து வருகிறது.  2012-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த அந்தஸ்தின் மூலம் பொதுச் சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாலஸ்தீனத்தால் முடியும்; ஆனால், வாக்கெடுப்புகளில் பங்கேற்கமுடியாது.

பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. பொதுச் சபையில் முழு உறுப்பினா் அந்தஸ்து அளிப்பதற்கான தீா்மானத்தை ரத்து செய்தது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதா் ராபா்ட் வூட் அளித்த விளக்கமாவது:

இந்தத் தீா்மானத்தை ரத்து செய்ததால் பாலஸ்தீனம் தொடா்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாகக் கருதக்கூடாது.  இஸ்ரேலும்,  பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு தனித் தனி சுதந்திர நாடுகளாகச் செயல்படும் ‘இரட்டை தேசத் தீா்வு’ ஒன்று தான் பாலஸ்தீனப் பிரச்னைக்கு ஒரே விடை என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.  பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதில் அமெரிக்காவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

இருந்தாலும்,  இந்த விவகாரத்தில் ஒருதலைப்பட்சமான முடிவை எடுக்கக்கூடாது; அனைத்துத் தரப்பு ஒப்புதலுடன் மட்டுமே தீா்வு எட்டப்படவேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு.  இதன் காரணமாகத்தான் இந்தத் தீா்மானத்தை நிராகரித்தோம்.  இது தவிர, பாலஸ்தீனத்தை ‘நாடு’ என்ற வரையறைக்குள் கொண்டு வருவதற்கு அரசுக் கட்டமைப்பு சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும என்று அந்தப் பகுதி அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.  ஹமாஸ் பாலஸ்தீனத்தின் அங்கமாகத் திகழும் காஸாவில் செல்வாக்கு செலுத்தி வருவதும் தீா்மானத்தை நிராகரித்ததற்கான காரணங்களில் ஒன்று என்றாா் அவா்.

Tags :
Advertisement