நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் வெற்றி..!
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்று நியுயார்க். இந்த நகரத்தின் மேயருக்கான தேர்தல் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஆண்ட்ரூ குவோமோ, குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் சில்வா மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஸோரான் மம்தானி ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் ஸோரான் மம்தானி 50.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடந்துள்ளார். வரை எதிர்த்து போட்டியிட்ட ஆண்ட்ரூ குவோமோ 41.6 சதவீத வாக்குகளையும், கர்டிஸ் சில்வா 7.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயர் தேர்தலில்வெற்றி பெற்று வரலாறு படைத்தார். இந்த வெற்றியின் மூலம் ஸோரான் மம்தானி பல்வேறு சாதனைகளுக்கு ஆளாகியுள்ளார். இதன் மூலம் ஸோரான் மம்தானிதான், நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய - அமெரிக்க மேயராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து மேயரானவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
யார் இந்த ஸோரான் மம்தானி..?
ஸோரான் மம்தானி, உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்தார். இவரின் பெற்றோர் இவருக்கு ஏழு வயதாக இருந்தபோது நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அவரது தாயார் மீரா நாயர் ஒரு புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். அவரது தந்தை மஹ்மூத் மம்தானி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஸோரான் மம்தானி முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நியூயார்க் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த, மம்தானி தனது பிரச்சாரத்தில் இலவச குழந்தை பராமரிப்பு, இலவச பேருந்துகள், புதிய மலிவு விலை வீடுகள் மற்றும் செல்வந்தர்கள் மீதான வரிகளை உயர்த்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.