“மத்திய நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்..!” - குடியரசுத் தலைவருக்கு ஜிஎஸ்டி துணை ஆணையர் கடிதம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு ஐஆர்எஸ் அதிகாரியும் சென்னை ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விவசாயியின் சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால், விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் தனது கடிதத்தில் பாலமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு...! - பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு
நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சராக பதவியேற்ற பின் அமலாக்கத்துறையை பாஜகவின் கொள்கை இயக்குநரகமாக மாற்றிவிட்டார் எனவும், அவரிடம் இருந்தும், மத்திய அதிகாரிகளிடம் இருந்தும் தேவையற்ற அழுத்தங்கள் வருவதாகவும் ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.