நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்வு ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இது நாட்டிற்கு மற்றொரு கடுமையான பிரச்னையாக இருக்ககூடும் என தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும், பட்டதாரிகளுக்கு வேலையின்மை தொடர்பாக பொருளாதார சிந்தனைக் குழுவான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) இணைந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “அமலாக்கத் துறை 250 முறை ரெய்டு நடத்தியும் ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி பேட்டி!
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, கடந்த 2000 ஆம் ஆண்டில் வேலையில்லாதவர்களின் விகிதம் 54.2% இருந்துள்ளது. அதன்பின் 2022 ஆம் ஆண்டு நடைபெற ஆய்வில் வேலையில்லாத படித்த இளைஞர்களின் விகிதம் 65.7% ஆக இருந்தது. அந்த ஆண்டு வேலையில்லாத ஆண்களின் விகிதம் 62.2% ஆக இருந்துள்ளது. இதைபோல் பெண்களின் விகிதம் 76.7% ஆக இருந்தது. ஆண்களை விட பெண்களின் விகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை,வேலையின்மை சற்று குறைவாக இருந்தது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பிற்குபின் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேலை உருவாக்கத்தை ஊக்குவித்தல், வேலையின் தரத்தை மேம்படுத்துதல், தொழிலாளர் சந்தையில் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல், செயலில் உள்ள தொழிலாளர் சந்தையின் திறன்கள் மற்றும் கொள்கைகள் இரண்டையும் வலுப்படுத்துதல், மற்றும் தொழிலாளர் சந்தை முறைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றிய அறிவுப் பற்றாக்குறையைக் குறைத்தல் ஆகியவை வேலையின்மை குறைக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
IHD & @ILONewDelhi hosted Launch of the "India Employment Report 2024: Youth Employment, Education and Skills" by Dr. Anantha Nageshwaran, Chief Economic Adviser to GoI. Discussion, chaired by @profdnayyar shaped the conversation on the future of youth employment in India. pic.twitter.com/7tZ0jvJkBB
— IHD (@TweetIHD) March 27, 2024