மிஷன் சேப்டர்-1ன் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.12 ஆம் தேதி வெளியான அருண் விஜய்யின் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் இரண்டு நாட்களில் 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’. இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஜன.12 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிங்கிள் ஃபாதராக வாழ்ந்து வரும் குணசேகரன் (அருண் விஜய்) மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்கிறார். அப்போது எதிர்பாராவிதமாக ஒரு கும்பலுடனான சண்டையில் லண்டன் போலீஸுடனும் அருண் விஜய் மோத, அங்கேயே சிறையில் அடைக்கப்படுகிறார். அப்போது அந்த சிறையில் உள்ள தீவிரவாதிகள் சிலர் வெளியே தப்பி செல்வதற்கான திட்டங்களை தீட்டுகின்றனர். அவர்களின் அந்த மிஷன் நிறைவேறியதா, அருண் விஜய் குழந்தையைக் காக்கும் தன்னுடைய மிஷனில் வெற்றிப் பெற்றாரா என்பதுதான் இந்த 'மிஷன் - சாப்டர் 1' ன் கதை.
இந்நிலையில், வெளியான இரண்டு நாட்களில் படம் 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.