For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

10:45 PM Jan 02, 2024 IST | Web Editor
லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது
Advertisement

புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷயா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்ட மசோதாக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.  அதனைத் தொடர்ந்து, இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதில் வாகன விபத்து தொடர்பான திருத்தச்சட்டமும் இடம்பெற்றுள்ளது.

இதில், சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வாகன போக்குவரத்து சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்தால் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து லாரி ஓட்டுனர் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

Tags :
Advertisement