"ஆர்யன்" படத்தின் டிரெய்லர் வெளியானது..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி ராட்சசன் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் ஆர்யன் என்னும் படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் படி படத்தில் டீசர், மற்றும் முதல் பாடல்கள் ஆகியவை வெளியாகிருந்தன. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரெய்லரை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.
This one's really close to my heart. A new experience awaits you in theatres on October 31st.#AARYAN - TRAILER out now.
Tamil ▶️ https://t.co/zeA0of7iRi
Telugu ▶️ https://t.co/Csbd6IzT8m pic.twitter.com/IH9dz2u6fi— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) October 19, 2025