For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புது பொலிவுடன் ஆளவந்தான் படத்தின் டிரெய்லர் வெளியானது!

06:21 PM Dec 02, 2023 IST | Jeni
புது பொலிவுடன் ஆளவந்தான் படத்தின் டிரெய்லர் வெளியானது
Advertisement

புது பொலிவுடன் டிச. 8ம் தேதி வெளியாக உள்ள ஆளவந்தான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisement

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கமல்ஹாசன் எழுதிய ‘தாயம்’ என்ற கதையை மையமாகக் கொண்டு, அவரே நாயகனாகவும், வில்லனாகவும் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். உளவியல் சிக்கலைப் பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவ. 15-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி 22 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில்,  படத்தின் தயாரிப்பாளர் தாணு ஆளவந்தான் படம் புது பொலிவுடன் டிச. 8-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 2 நிமிடங்கள் 10 நொடிகளுக்கு விறுவிறுப்பாக எடிட் செய்யப்பட்டுள்ளது.  இந்த திரைப்படம் உலகமெங்கும் 1000 திரையரங்குகளில் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான ‘முத்து’ திரைப்படமும் வரும் டிச. 8ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement