Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூங்கிக் கொண்டிருந்த கணவருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி செய்த கொடூர செயல்!

தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
07:58 AM Oct 09, 2025 IST | Web Editor
தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement

டெல்லியில் உள்ள மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). இவருக்கும், சாதனா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 8 ஆண்டும் ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement

இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் திடீரென தினேஷ் கத்தியுள்ளார். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தினேஷ் வீட்டின் கதவை தட்டினர்.  கதவு உள்புறம் பூட்டப்பட்டிருந்த சூழலில் சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷின் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து அவர் கூறும்போது,  "சம்பவத்தன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் எரிச்சலாக இருந்ததை உணர்ந்து கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தார். அவர் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தார்.

அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினார். நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினார்" என்று தெரிவித்தார்.  தினேஷின், மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் இருந்தது. இச்சம்பவம் குறித்து தினேஷின் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Chilly PowderCrimeDelhihospitalHot OilLatest NewsPolice
Advertisement
Next Article