For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

04:27 PM Mar 28, 2024 IST | Web Editor
“கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது”   உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
Advertisement

“கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம்
வந்துவிட்டது” என கள்ளழகர் விழா மீதான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

Advertisement

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது.  பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல்பைகளில் நறுமணநீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி
அடிப்பார்கள்.  பக்தர்கள் விரதமிருந்து தோல்பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய
குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது
வழக்கம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக
விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம்
மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை
ஏற்பட்டுள்ளது. மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டர்கள்,
பிரசாரகர், பணியாளர்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும்
பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும்
பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை
பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

“முன்பு இயற்கையான முறையில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிக விசையுடன்கூடிய பம்புகளை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கின்றனர். பெண்கள்,  குழந்தைகள் மீதும் அதிக விசையோடுஉள்ள பம்பு மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கின்றனர்.  இதனை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.  இந்த வழக்கில் மதுரை மாநகர காவல் ஆணையர்,  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்படுகிறது.

இந்த வழக்கில் விரிவான உத்தரவு வரும் செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்படும்”
எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

Tags :
Advertisement