"அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி குழப்பத்தை தான் ஏற்படுத்தும்" - அமைச்சர் மனோ தங்கராஜ்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மனுஸ்மிருதி அடிப்படையில் இந்து ராஷ்ரியம் கட்டமைப்போம் என்று ஆர்எஸ்எஸ் கூறி உள்ளது. அதை பாஜக வழி மொழிந்துள்ளது.
இந்திய துணை கண்டத்தில் சமத்துவ சமூகத்தை சீரழித்து சாதியை கட்டமைத்து அதிலிருந்து விடுபட தான், நம்ம பெரியாரும் அண்ணாவும் பாடுபட்டனர். அண்ணாவின் பெயரை தாங்கி நிற்கும் அந்த கட்சி மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் ஆட்சியை அமைப்போம் என்று கூறுகின்றது. இந்த துர்பாக்கிய நேரத்தில் அவர்களுடன் கூட்டணி வைத்தது என்ன தவறு இருக்கிறது என்று கேட்டால், தவறு மொத்தமாக அவரிடம் தான் உள்ளது.
அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி என்பது குழப்பத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தும் நிகழ்வாக தான் பார்க்க வேண்டும். அதிமுகாவே கூட்டணி குறித்து தெளிவான முடிவு இல்லாத நிலையில் அதன் வெளிப்பாடாகவே தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.