For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான வள்ளி மயில் படத்தின் டீசர் வெளியானது..!

06:03 PM Nov 28, 2023 IST | Web Editor
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான வள்ளி மயில் படத்தின் டீசர் வெளியானது
Advertisement

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான வள்ளி மயில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம், 'வள்ளி மயில். இப்படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், 'புஷ்பா' சுனில், கயல் தேவராஜ், ஃபரியா அப்துல்லா, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி,  அறந்தாங்கி நிஷா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமக்கிறார். இப்படத்தை  நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 1980 -களில் புகழ் பெற்ற 'வள்ளி திருமணம்' நாடகத்தை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளி மயில் திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் நிலையில் இப்படத்தை  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசரைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement