’காந்தா’ படத்தின் புதிய பாடலை வெளியிட்ட படக்குழு..!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரூ 100 கோடி வசூலித்து மிரட்டியது. இதனை தொடர்ந்து துல்கர் சல்மான நடிப்பில் வெளியீட்டுக்கு தயராகியுள்ள படம் காந்தா.
இப்படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்வை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் மூலம் நடிகை பாக்யஸ்ரீ போஸ் தமிழில் அறிமுகமாகிறார்.
காந்தா திரைப்படம் வருகிற நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின், ‘கண்மணி நீ’ எனும் முதல் பாடல் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகியது.
இந்த நிலையில் தற்போது காந்தா படத்திலிருந்து ரேஜ் ஆஃப் காந்தா என்னும் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
The fire within you now has a Raging soundtrack.🔥
Unleashing “Rage of Kaantha” - lyrical video OUT NOW!⚡https://t.co/SeMBOweAjk
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms #Bhagyashriborse… pic.twitter.com/nKcGkXhYct
— Rana Daggubati (@RanaDaggubati) October 30, 2025