For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய மதிப்பீட்டாளர் - கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

01:28 PM Jan 11, 2024 IST | Web Editor
வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய மதிப்பீட்டாளர்   கையும்  களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை
Advertisement

சென்னையை அடுத்த மணலியில் வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய ரூ 6,000 லஞ்சம் வாங்கிய வரி மதிப்பீட்டாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

Advertisement

சென்னை மணலி மஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (47).   இவர் மணலி மண்டலம் வருவாய் பிரிவில் வரி மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தன்னுடைய வீட்டு வரியில் பெயரை மாற்றுவதற்காக பாஸ்கரை அணுகி உள்ளார்.

அப்பொழுது பாஸ்கர் பெயர் மாற்றம் செய்ய ரூ. 6,000 லஞ்சம் கேட்டுள்ளார்.  அதற்கு சீனிவாசன் பணம் தர முடியாது என மறுத்துள்ளார்.  பணம் தராததால் பெயரை மாற்றாமல் சீனிவாசனை இழுத்து அடித்துள்ளார்.  சீனிவாசன் இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஊழல் தடுப்பு துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அதிகாரிகள் பாஸ்கர் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.  விசாரணையில் அவர் இதுபோல் பலமுறை லஞ்சம் பெற்றது தெரியவந்தது.  தொடர்ந்து அவரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.  அதன்படிஊழல் தடுப்பு துறை அதிகாரிகள் சீனிவாசனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அந்த பணத்தை பாஸ்கரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: நாமக்கல்லில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை!

அதன்படி சீனிவாசன் பணத்தை பாஸ்கரிடம் கொடுத்துள்ளார்.  பணத்தை
பெற்றுக் கொண்ட பாஸ்கர் அதை வாங்கி தனது மேல் பாக்கெட்டில் வைத்துள்ளார்.
அப்போது வெளியில் தயாராக இருந்த ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்து பாஸ்கரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் போலீசார் கைது செய்த பாஸ்கரை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Tags :
Advertisement