For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"TET தேர்வு ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது" - அன்பில் மகேஷ் பெய்யாமொழி பேட்டி!

எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.
11:46 AM Sep 02, 2025 IST | Web Editor
எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 tet தேர்வு ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது    அன்பில் மகேஷ் பெய்யாமொழி பேட்டி
Advertisement

தமிழக முழுவதும் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி கே.கே.நகரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளியில் சேரும் மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு புத்தகம், பேனாக்களை வழங்கினார்.

Advertisement

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் மலர்விழிராஜேந்திரன், பொற்கொடி, பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் ராணி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என நீதிமன்ற தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் விபரம் முழுமையாக கிடைத்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் இது குறித்து மேல்முறையீடு செய்யப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement