For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"முதல்வரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தூத்துக்குடி கார் தொழிற்சாலை" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

பிரதமர் மோடி அறிவித்ததை விட பன்மடங்கு பெரிய திட்ட அறிவிப்புகள் தூத்துக்குடிக்கு காத்திருக்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
01:08 PM Jul 27, 2025 IST | Web Editor
பிரதமர் மோடி அறிவித்ததை விட பன்மடங்கு பெரிய திட்ட அறிவிப்புகள் தூத்துக்குடிக்கு காத்திருக்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
 முதல்வரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தூத்துக்குடி கார் தொழிற்சாலை    அமைச்சர் டி ஆர் பி ராஜா
Advertisement

திருச்செந்தூரில் அமைச்சர் டி.ஆ.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "உலகமே மெச்சும் அளவிற்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது. தூத்துக்குடியில் கார் உற்பத்தி தொழிற்சாலையை வரும் 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

Advertisement

தூத்துக்குடி பிரம்மாண்டமான முறையில் வின்பாக்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய கார் நிறுவனம் 15 மாதத்திற்குள் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் அமைவது என்பது வரலாற்று சாதனை. முதல்வரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தூத்துக்குடி கார் தொழிற்சாலை.

தூத்துக்குடியில் மினி ஜிம் தொடங்கும் திட்டம் உள்ளது. அதில் பல்வேறு புதிய தொழில்கள் வரவிருக்கிறது. தூத்துக்குடியில் தொடங்கும் கார் தொழிற்சாலையால் புதிய நல்ல வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.
பிரதமர் மோடியின் திட்டங்களால் தமிழ்நாட்டிற்கு பலன்கள் உள்ளது.

தூத்துக்குடி வெள்ள நிவாரணத் தொகையை பிரதமர் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். பிரதமரை விட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரந்து விரிந்த மனது. பிரதமர் மோடி அறிவித்ததை விட பன்மடங்கு பெரிய திட்ட அறிவிப்புகள் தூத்துக்குடிக்கு காத்திருக்கிறது. இந்தியா கூட்டணியில் குழப்பம் வந்துவிடாதா என அர்ப்ப ஆசையில் எதிரிணியினர் சுற்றித்திரிவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement