பேசுவதை நிறுத்திய மாணவி... சக மாணவன் செய்த கொடூர செயல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் (மே 3) சிறுமி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள உமர்பன் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட விவசாய நிலத்தில் சிறுமியின் உடல் கண்டுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டனர்.
இதையும் படியுங்கள் : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை… சவரனுக்கு ரூ.160 உயர்வு… இன்றைய விலை நிலவரம் என்ன?
கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சிறுமிக்கு 17 வயது என்பதும், அவர் 12ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. போலீசாரின் அடுத்தக்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முன்னதாக சக மாணவன் உயிரிழந்த சிறுமியை தொந்தரவு செய்து வந்ததாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த சிறுமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அந்த சிறுமி தன்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் இதனால் தான் மிகுந்த வருத்தமடைந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். அந்த சிறுவன் கடந்த 2ம் தேதி இரவு தன்னை சந்திக்க வருமாறு சிறுமியிடம் கூறியிருக்கிறார். அதன்படி, சிறுமி அந்த விவசாய நிலத்திற்கு வந்தார். அங்கு அவர் கூர்மையான ஆயுதத்தால் அந்த சிறுமியை கொன்றதாக ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.