For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5 கோடி பார்வைகளைக் கடந்த 'விசில் போடு' பாடல்!

02:48 PM May 05, 2024 IST | Web Editor
5 கோடி பார்வைகளைக் கடந்த  விசில் போடு  பாடல்
Advertisement

நடிகர் விஜய்யின் கோட் படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு பாடல் யூடியூப்பில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

Advertisement

‘லியோ’  திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில்,  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘The Greatest of All Time’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  பிரஷாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘G.O.A.T.’ திரைப்படம் நடிகர் விஜயின் 68-வது திரைப்படமாகும்.  இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.  சமீபத்தில், கோட் படத்தின் முதல் பாடலான, ‘விசில் போடு’ வெளியாகி இணையத்தில் வைரலானது.  இந்த நிலையில், இப்பாடல் யூடியூப்பில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

Tags :
Advertisement