For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காதலே காதலே படத்தின் #Aasai பாடல் வெளியானது!

காதலே காதலே படத்தில் இடம்பெற்றுள்ள ஆசை பாடல் வெளியானது
02:56 PM Jan 14, 2025 IST | Web Editor
காதலே காதலே படத்தின்  aasai பாடல் வெளியானது
Advertisement

மங்காத்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஓரளவுக்கு பரிட்சையமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ்  சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். சர்ச்சைகளில் அடிக்கடி மஹத் ராகவேந்திரா சிக்கினாலும் விஜய், அஜித், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவ்வபோது பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

Advertisement

இவர் மங்காத்தா, ஜில்லா, 600028  பாகம் 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து  2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவர் கடைசியாக மாருதி நகர் போலிஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது மகத் 'காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே.வி ஆனந்தின் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலே காதலே படத்தில் மஹத்திற்கு  ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கனேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

காதலே காதலே படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான ஆசை பாடலின் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். ஆசை எனும் பாடலை வியன் புகழேந்தி வரிகளில் விஷால் சந்திரசேகர் பாடியுள்ளார்.

Tags :
Advertisement