”தி பேமிலி மேன்” படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் உருவான ”தீ பேமிலி மேன்-3” இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் ,பிரியாமணி ஆகியோர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான வெப் தொடர் ” தி பெமிலி மேன்”. இத்தொடர் நாஜ் & டி.கே இயக்கிருந்தார்கள். இந்த வெப் தொடர் நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து இதன் இரண்டாவது சீசன் 2021-ம் ஆண்டு வெளியானது.இதுவும் ரசிகர்களிடம் பெரிதாக கவனம் பெற்றது.
ஆனால், இத்தொடரில் இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்ததற்காக பல சர்ச்சைகள் எழுந்தன. தமிழகத்தில் இந்த சீசனை புறக்கணிக்க வேண்டும் என்றும் ஒளிபரப்பக் கூடாது என்றும் பலர் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் ,சில மாதங்களுக்கு முன்பு ,சீசன் 3 தொடருக்கான படப்பிடிப்பை தொடங்கினர். இப்படப்பிடிப்பு இப்பொழுது நிறைவடைந்துள்ளதாக நடிகர் மனோஜ் பாஜ்பாய் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை அதனுடன் பகிர்ந்துள்ளார்.