நெட்பிளிக்ஸ்-ல் Squid Game: The Challenge வெளியானது!!
நெட்பிளிக்ஸில் ‘ஸ்குவிட் கேம்’ தொடரின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? உடனடியாக கொல்லப்படுகிறார்கள். ஒரு சிறிய கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்ட இத்தொடருக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியாவிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்த ‘ஸ்குவிட் கேம்’ தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது.
இந்நிலையில், நெட்பிளிக்ஸில் இன்று Squid Game: The Challenge வெளியாகியுள்ளது.