For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஊட்டியிலும் கொளுத்தும் வெயில் | 29 டிகிரி வெப்பம் பதிவானதால், சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!

06:52 AM Apr 29, 2024 IST | Web Editor
ஊட்டியிலும் கொளுத்தும் வெயில்    29 டிகிரி வெப்பம் பதிவானதால்  சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
Advertisement

இதுவரை இல்லாத வகையில் குளிர்ச்சியான இடமான ஊட்டியில் 29டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Advertisement

கால நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வெயிலானது வெளுத்து வாங்குகிறது. நாட்கள் செல்ல, செல்ல சூரியன் வீட்டின் மொட்டை மாடியில் வந்து இறங்கிவிட்டதோ என்ற சந்தேகப்படும் வகையில் வீட்டிற்குள் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் முடங்கிய மக்களுக்கு மேலும் வெயில் வாட்டி வதைக்கிறது.

இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வெப்பநிலையானது இயல்பை விட 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசிவருகிறது. ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையி 108 டிகிரியை தொட்டுள்ளது. இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை குளு, குளு இடங்களை தேடி செல்கின்றனர். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிக்கு குடும்பத்தோடு படை எடுத்து வருகின்றனர்.

ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஊட்டியிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. மழை மற்றும் குளுமை இல்லாமல் வெயில் அதிகரித்துள்ளது. பல இடங்களில் காட்டுத்தீயும் பற்றி எரிகிறது. இந்தநிலையில், ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதை விட நேற்று அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.  ஊட்டியில் 29 டிகிரி செல்சியஸ்(84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது.

கடந்த 1951ம் ஆண்டிலிருந்து இப்போது வரை பதிவான வெப்ப நிலையில் இதுதான் மிக அதிகம் . கடந்த 73 ஆண்டுகளில் நேற்று தான் ஊட்டி மிகவும் வெப்பமான தினத்தைசந்தித்திருக்கிறது. இது தொடர்பாக அதிக வெப்பம் குறித்து ஒப்பீட்டு அட்டவணையை வெளியிட்டது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement