“ஆர்.எஸ்.எஸ். - பாஜக சுதந்திர காற்றை சுவாசிக்க காரணம் இஸ்லாமியர்களின் தியாகம்” - செல்வப்பெருந்தை பேச்சு!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரியச் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை பாரிமுனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம அருகே இன்று(ஏப்ரல்.18) நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்
பெருந்தகை, திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழக பிரச்சார அணி செயலாளர் அருள் மொழி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
அப்போது செல்வபெருந்தகை பேசியதாவது, “ சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வரலாம். ஆனால், அடிப்படை சட்டங்களில் திருத்தங்களை செய்ய முடியாது. அடிப்படை சட்டத்தில் திருத்தம் செய்தால் அரசியலமைப்பு சட்டமே கேலிக்கூத்தாகிவிடும். எதற்காக வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்?
தேச விடுதலைக்காக உழைத்தவர்கள் இஸ்லாமியர்கள். தேச விடுதலைக்காக உங்களின் (பாஜக) அர்ப்பணிப்பு தியாகம் என்ன? இஸ்லாமியர்கள் இல்லாமல் இந்தியா விடுதலை அடையவில்லை. ஆர்.எஸ்.எஸ். ,பாஜக சுதந்திர காற்றை சுவாசிக்க காரணம் இஸ்லாமியர்களின் தியாகம் தான். வக்ஃபு வாரிய சொத்துக்களை கொள்ளை அடிக்க வேண்டும். சிதைக்க வேண்டும என்பதற்காகவே வக்ஃபு வாரிய திருத்த சட்டம்.
அறங்காவலர் குழு தலைவராக ஒரு இஸ்லாமியர்களை நியமிக்க முடியுமா ? பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரும். பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டத்தால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு-க்கும்,பீகாரில் நிதீஷ் குமாருக்குக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மூன்று காலில் நிற்கும் பாஜக ஆட்சிக்கு ஒரு கால் விலக தொடங்குகிறது.எனவே பாஜக ஆட்சி கவிழ்வதற்கு நீண்ட நெடிய நாட்கள் இல்லை”
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்ர்.