For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள்" - செல்லூர் கே.ராஜு!

டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா, உதயநிதிக்கு தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார்கள் என்று செல்லூர் கே.ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார்.
12:59 PM Sep 13, 2025 IST | Web Editor
டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா, உதயநிதிக்கு தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார்கள் என்று செல்லூர் கே.ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார்.
 ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள்    செல்லூர் கே ராஜு
Advertisement

மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரத்தில், ரூ.18 லட்சம் மதிப்பிலான கலையரங்கத்தின் மேற்கூரை திறப்பு விழா, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ "நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன்.

Advertisement

பத்திரப்பதிவுத் துறை அமைச்சரின் கிழக்கு தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டம் நாங்கள் கொண்டு வந்தோம். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்களை எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களுடைய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. புதிதாக மண்டல தலைவர் போட போகிறார்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் முன்னாள் இருந்தவர்கள் போதும் 250 கோடியை சுவாகா பண்ணிட்டாங்க.

விஜய் வாகனத்தில் எம்ஜிஆர் படம் உள்ளது என்பது குறித்த கேள்விக்கு, "எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. புயல் மையம் கொண்டுள்ளது என்று சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிச்சாமி சென்ற இடங்களில் மக்கள் மையம் கொண்டுள்ளனர். நாட்டில் ED ரெய்டு நடந்துள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி நான்கு வருடம் ஆகிவிட்டது. அதனை திறக்க முடியவில்லை.

விஜய் பிரச்சாரத்திற்கு தடைகள் குறித்த கேள்விக்கு, "ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள் அது முடியாது. யாராச்சும் கலைஞர் ஆட்சி அமைப்போம் என சொல்கிறார்களா. அதிமுக பற்றி தான் பேசுகிறார்கள் தவிர, திமுக பற்றி யாராவது பேசுகிறார்களா, டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா, உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement