தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் - காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!
09:32 AM Feb 27, 2024 IST
|
Web Editor
இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்டதாக நேற்றைய முன்தினம் தேவகோட்டை தென்னீர் வயலை சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் கல்லு வழி கிராமத்தை சேர்ந்த கணபதி ஆகிய இருவரை கைது செய்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவ இடங்களை அடையாளம் காண போலீசார் தினேஷ்குமாரை தேவகோட்டைக்கு வேனில் அழைத்து சென்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தினேஷ் குமாரை மீட்டு, சிகிச்சைக்காக
தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
குற்றவாளி தாக்கியதில் காயம் அடைந்த சார்பு ஆய்வாளர் சித்திரவேலும் அதே
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு குற்றவாளியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Advertisement
தேவகோட்டை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர்.
Advertisement
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே கல்லு வழி கிராமத்தில் கடந்த மாதம்
26 ஆம் தேதி வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை வெட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை பிடிக்க போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்டதாக நேற்றைய முன்தினம் தேவகோட்டை தென்னீர் வயலை சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் கல்லு வழி கிராமத்தை சேர்ந்த கணபதி ஆகிய இருவரை கைது செய்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவ இடங்களை அடையாளம் காண போலீசார் தினேஷ்குமாரை தேவகோட்டைக்கு வேனில் அழைத்து சென்றனர்.
அப்போது முக்கூரணி என்ற இடத்தில், பறிமுதல் செய்து கொண்டு வந்த இரும்பு
கம்பியை எடுத்து,சார்பு ஆய்வாளர் சித்திரவேலை தாக்கிவிட்டு தப்பிக்க
முயன்றார். இதனை சிறிதும் எதிர்பாராத காவல் ஆய்வாளர் ஆடிவேல் குற்றவாளியை
துப்பாக்கியால் காலில் சுட்டார்.
தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
குற்றவாளி தாக்கியதில் காயம் அடைந்த சார்பு ஆய்வாளர் சித்திரவேலும் அதே
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு குற்றவாளியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Next Article