“இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே பாஜக வெற்றிக்கு காரணம்”- சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சண்முகம்!
சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயாலளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்திருப்பது வருத்தத்திற்குரிய செய்தி.
இதற்கு இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே காரணம். பல்வேறு கட்சி தலைவர்களின் அணுகு முறையை பார்க்கும் போது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி இருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகம் எழுகிறது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே பாஜகவை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை, மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்” என தெரிவித்தார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிஷோடியா தோல்வியை சந்தித்துள்ளனர்.
காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் பாஜகவின் வெற்றிக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையேயான மோதலே காரணம் என இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.