For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
09:03 AM May 16, 2025 IST | Web Editor
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்   ரிசல்ட் பார்ப்பது எப்படி
Advertisement

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8.08 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியானது. அதில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே இன்று (மே 16) வெளியாகியுள்ளது. இவற்றை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் வெளியிட்டார். இந்த தேர்வை மொத்தமாக 8,71,239 பேர் எழுதினர். இதில், 4,35,119 பேர் மாணவிகள், 4,36,120 பேர் மாணவர்கள். இதில், 817.261 (93.80%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 4,17,183 (95.88%) மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், 4,00,078 (95.88%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 4.14% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.inhttps://results.digilocker.gov.in/ ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும். அதேபோல், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

சிவகங்ககை - 98.31%
விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76%
கன்னியாகுமரி - 96.66%
திருச்சி - 96.61%

Tags :
Advertisement