“பராசக்தி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரொமோ வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அமரன், மதராஸி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பின. அதிலும் அமரன் திரைப்படம் உலக அளவில் 300 கோடி வரை வசூலித்து மிரட்டியது.
இந்த நிலையில் தற்போது சிவாகர்த்திகேயன் இறுதிச்சுற்று, சூரரை போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கொராவின் இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா இப்பட்த்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 100வது படம் ஆகும். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு ஒன்றில், ’பராசக்தி’ படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ’பராசக்தி’ படத்தின் முதல் பாடலின் புரோமோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
