‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான ‘குபேரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் உலகளவில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ராஷ்மிகா மந்தனா புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘தி கேர்ள் பிரண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்த படம் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
WHO IS YOUR TYPE?
Let's have this conversation with #TheGirlfriend in theaters from NOVEMBER 7th, 2025 ✨
In Telugu, Tamil, Hindi, Kannada, and Malayalam ❤️ #TheGirlfriendOnNov7th#WhoIsYourType@iamRashmika @Dheekshiths @23_rahulr @HeshamAWMusic… pic.twitter.com/e0mJht9RPH
— Geetha Arts (@GeethaArts) October 4, 2025
சமீபத்தில், ராஷ்மிகாவின் முதல் தோற்றம் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.