For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சேஸிங்கில் துவம்சம் செய்த பஞ்சாப் அணி - கொல்கத்தா அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றி!

07:02 AM Apr 27, 2024 IST | Web Editor
சேஸிங்கில் துவம்சம் செய்த பஞ்சாப் அணி   கொல்கத்தா அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றி
Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் அணி இடையேயான போட்டியில் அதிரடியாக சேஸிங்கில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன் மற்றும் பிலிப் சால்ட் களம் இறங்கினார்.

பிலிப் சால்ட் 6 சிக்சர் 6 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். சுனில் நரைன் 4 சிக்சர் 9 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார்.  இருவரும் 10.2 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தனர்.  அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களும், ரஸல் 24 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 261 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர், சேம் கரன், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  இதனையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி வீரர்கள் களம் இறங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பார்ட்ஷோ அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்ட்ரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விளாசினர். 20 பந்துகளுக்கு 54ரன்கள் எடுத்த நிலையில் பிரப்சிம்ரன் சிங் ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து ஜானி பார்ட்ஷோவுடன் கை கோர்த்த ரிலே ரோஷொவும் 26ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.  இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங் சிங் நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுக்க அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது.

ஜானி பார்ட்ஷோ மற்றும்  ஷஷாங் சிங் அதிரடியாக விளையாடி ரன்களை சரமாரியாக உயர்த்தி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வரலாற்று வெற்றி பெற்றுள்ளனர்.  இதன்  மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனை படைத்தது பஞ்சாப் அணி. ஜானி பிரட்ஷோ 48பந்துகளில் 108ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

Tags :
Advertisement