திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்து அமைப்பினர் சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரதத்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணானது சர்வே கல் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், அது முற்றிலும் உண்மைக்கு புறம்மானது, பொய்யான தகவல் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.