ஷேக் ஹசீனாவின் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற பொருட்கள் என்னென்ன தெரியுமா?
வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் பலர் ஷேக் ஹசீனாவின் பல தனிப்பட்ட உடைமைகளை எடுத்து செல்லும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
வங்கதேசத்தில் அரசுப் பணியில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை மாதம் தொடங்கிய மாணவர் போராட்டம் கலவரமாக மாறியது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்தனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வங்கதேசம் முழுவதும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. நிலைமை மிகவும் மோசமானதை தொடர்ந்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததுடன், நாட்டை விட்டே வெளியேறி இந்தியா வந்தடைந்தார்.
வங்கதேசத்தின் தலைநகரான டக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த டிவி, நாற்காலி, மேசை போன்ற பொருட்களை எடுத்து சென்றனர்.
மேலும் அவரின் உள்ளாடைகள், ஆடைகள், கால்நடைகள், ஆடு, வாத்து, மீன், சூட்கேஸ் என தனிப்பட்ட உடமைகளையும் சூறையாடினர். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.