For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லோகேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' படத்தின் புரோமோ வெளியீடு!

09:10 PM Dec 18, 2024 IST | Web Editor
லோகேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள  மிஸ்டர் பாரத்  படத்தின் புரோமோ வெளியீடு
Advertisement

லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. இதில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ உருவாகி வரும் நிலையில் ‘மிஸ்டர் பாரத்' படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த புரோமோவில் தனது வழக்கமான படங்களில் வரும் துப்பாக்கி, பவுடர் என எதுவும் இதில் இருக்காது என லோகேஷ் தெரிவித்துள்ளார். நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூடியூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். கட்சி சேரா பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் பால சரவணன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சத்யராஜ் நடிப்பில் 'மிஸ்டர் பாரத்' என்ற படம் ஏற்கனவே வெளியானது. இப்படத்தின் தலைப்பை ரஜினிகாந்தின் உதவியின் மூலம் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லோகேஷ் பெற்றுள்ளார்.

Tags :
Advertisement