"பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும்" - அமைச்சர் கே.என்.நேரு!
அரியலூர் மாவட்ட திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் டிஜிட்டல் பாக முகவர்களுக்கான ஆய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது தமிழக முதல்வர் கூறியுள்ளது போல திமுகவில், அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.
பின்னர் கூட்டத்திற்கு மத்தியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "பாமகவிற்குள் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இந்தப் பகுதியை பொருத்தவரை பாமக ஒரு சக்தி, ஆனால் பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நமக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் மத்திய அரசின் ஒரே குறிக்கோள் என்னவென்றால், (ஆட்சிக்கு) நாம் வருகிறோமோ இல்லையோ, திமுக வரக்கூடாது என்ற எண்ணத்தோடு தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார்.
இடையில் நடிகர்கள் எல்லாம் உருவாகி இருக்கிறார்கள், நாளைக்கு முதலமைச்சர் ஆவதுபோல, உங்களோடு வரல, எங்களோட வரல என கூறுகிறார்கள். அதற்கெல்லாம் நாம் கவலைப்படவில்லை, நமது கூட்டணியோடு சென்று தேர்தலை சந்திப்போம் என்றும், தளபதியை முதலமைச்சர் ஆக்குவது நமது கடமை என தெரிவித்துள்ளார்.