Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற கைதி - துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த இன்ஸ்பெக்டர்..!

07:10 AM Nov 04, 2023 IST | Jeni
Advertisement

முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற போது காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற குற்றவாளியை காலில் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

Advertisement

திருச்சி மணிகண்டம் காவல் நிலைய சரகத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான குழந்தை இயேசு என்பவரது மகன் அலெக்சாண்டர் சாம்சன்(28) என்பவரை எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில் தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை தர்மபுரி மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து குற்றவாளி பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குற்றவாளி அலெக்சாண்டர், தான் பயன்படுத்திய ஆயுதங்கள் முசிறி அருகே தொட்டியம் வட்டம் நீலியாம்பட்டி கரடுப்பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மறைத்து வைத்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அலெக்சாண்டரை கரடுப்பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதையும் படியுங்கள் : தொடரும் கனமழை - பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

அப்போது திடீரென அலெக்சாண்டர் தப்பி ஓட முயற்சித்து போலீசார் மீது சராமாரியாக கற்களை வீசியுள்ளார். இதில் காவலர் ராஜேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுதாரித்துக் கொண்ட தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன், தப்பியோட முயன்ற அலெக்சாண்டரை, இடது முழங்காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். காயமடைந்த காவலர் ராஜேஷ்குமாரும், துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட அலெக்சாண்டரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags :
ArrestCrimegunTNPoliceTrichy
Advertisement
Next Article