For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"புதுச்சேரியின் உட்கட்டமைப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்கிறார்" - முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
01:51 PM Oct 13, 2025 IST | Web Editor
புதுச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
 புதுச்சேரியின் உட்கட்டமைப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்கிறார்    முதலமைச்சர் ரங்கசாமி
Advertisement

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை ரூ.436 கோடியில் 4 கி.மீ., தொலைவுக்கு புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்த மேம்பாலத்தை 30 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்றது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இதேபோல் ரூ. 25 கோடியில் 14 கிலோமீட்டர் ஈசிஆர் சாலையை மேம்படுத்துதல் மற்றும் ரூ.1,588 கோடியில், புதுச்சேரி முதல் பூண்டியான் குப்பம் வரை உள்ள நான்கு வழிசாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக கேட்டு கொண்டிருந்த இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான மேம்பாலம், புதுச்சேரி மக்கள் மிகவும் எதிர்பார்த்த ஒன்று.

புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பெரிய வளர்ச்சி வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். கடந்த ஆட்சி காலத்தில் இது போன்ற பணிகள் நடைபெற்றதா என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

சிவாஜி சிலையில் இருந்து முள்ளோடை வரை மேம்பாலம் அமைக்க நாம் கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது 436 கோடியில் ராஜிவ்காந்தி சிலை முதல் இந்திரா காந்தி சிலை மேம்பால பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டு தற்போது பணி துவங்கப்பட்டுள்ளது. மரப்பாலம் முதல் முள்ளோடை வரை மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நிதியை மத்திய அமைச்சர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாம் கேட்கும் நிதியை மத்திய அரசு நமக்கு வழங்கி வருகிறது. புதுச்சேரியின் உட்கட்டமைப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருந்து வருகிறார். இதற்காக புதுச்சேரி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags :
Advertisement