"பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போரையும் நிறுத்துவேன்" - அதிபர் டிரம்ப்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அதிபர் டிரம்ப், ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்க உள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிபர் டிரம்ப், "இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த தருணத்தை எல்லோரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர். இந்தப் போர் நிறுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றுவது பெருமையளிக்கிறது. இதுவரை எப்போதும் நடந்திடாத ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும், எனக் கூறினார்.
இது நான் முடித்து வைக்கும் 8வது போராகும். தற்போது, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானுக்கு இடையே ஒரு மோதல் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியதும், அதையும் நிறுத்துவேன். ஏனெனில் போர்களைத் தீர்ப்பதில் நான் சிறப்பானவன்" என்று தெரிவித்துள்ளார்.