For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#GoldRate | தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

10:37 AM Sep 06, 2024 IST | Web Editor
 goldrate   தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 உயர்வு
Advertisement

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும், அடிப்படையில்  கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப கடந்த மாதம் மட்டும் ரூ.5,000 வரை தங்கம் விலையும் குறைந்தது.

தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம் என்கிற வகையில், அடிக்கடி ஏற்றங்களை கண்டு வருகிறது.  அந்தவகையில் இன்று தங்கம் விலை அதிரடி ஏற்றம் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் 6,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்கப்பட்டு வருகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.92க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement