For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தங்கம் விலை கிடுகிடு உயர்வு! – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு!

11:32 AM Nov 17, 2023 IST | Web Editor
தங்கம் விலை கிடுகிடு உயர்வு  – ஒரே நாளில் சவரனுக்கு ரூ 520 அதிகரிப்பு
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

சர்வதேச பொருளாதார சூழல்,  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி,  தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில்,  சென்னையில் இன்று தங்கத்தில் விலை அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

அதனை தொடர்ந்து, சென்னையில் தங்கத்தின் விலை இன்று நவம்பர் 17 ஆம் தேதி  சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600- க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது.  எனினும் சமீபமாக தங்கத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (நவ.17) ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதுபோல ஒரு சவரன் தங்கம் ரூ.520 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement