For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமித்தார் குடியரசுத்தலைவர்!

08:37 PM Mar 14, 2024 IST | Web Editor
புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமித்தார் குடியரசுத்தலைவர்
Advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஏற்கெனவே தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற்றதை தொடர்ந்து, அவரது பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார். இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவின் கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஆதீர் ரஞ்சன், கேரளத்தை சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேரள பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர். மேலும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ் குமாரும் ஒருவர்.

Tags :
Advertisement