For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆர்யாவின் புதிய படம்! - படக்குழு கொடுத்த அப்டேட்

07:37 AM Aug 08, 2024 IST | Web Editor
ஆர்யாவின் புதிய படம்    படக்குழு கொடுத்த அப்டேட்
Advertisement

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

Advertisement

நடிகர் ஆர்யா 'அறிந்தும் அறியாமலும்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். ஆர்யாவின் 'சார்பட்ட பரம்பரை' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது. கடைசியாக தமிழில் வெளியான காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது மலையாள, தமிழ், மொழியில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஆர்யா நடிக்கவிருக்கிறார். லூசிபர், எமபுரான் படத்துக்கு கதை எழுதிய முரளி கோபி எழுதியுள்ள இந்தப் படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தினை மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இதன் பூஜை நேற்று (ஆக.7) ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : “இனி என்னிடம் போராட சக்தி இல்லை” – மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு!

பூஜை புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் நிஹிலா விமல் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மனு ஆனந்த் இயக்கித்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement