Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”விபத்து குறித்த காவல் துறை அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது” - மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு!

விபத்து குறித்த காவல் துறை அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது என மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியுள்ளார்.
02:41 PM May 05, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் அண்மையில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் வந்துகொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை அருகே அவர் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த  விபத்து குறித்து மதுரை ஆதீனம் தன்னை திட்டமிட்டு கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பின்பு காவல்துறை சம்பவம் தொடர்பாக விசாரித்து கொலை முயற்சிக்கான சதி இல்லை என விளக்கியது.

Advertisement

இந்த நிலையில் காவல்துறை முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த மே.02 அன்று காலை உளுந்தூர்பேட்டை ரவுண்டானத்தில் நடந்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் உண்மைக்கு புறம்பான விளக்க அறிக்கையை மறுக்கின்றோம். கார் விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் இதுவரை எந்தவித புகாரையும் தெரியப்படுத்தவில்லை என காவல்துறை அறிக்கையில் பார்த்தோம். சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே சரியாக காலை 09.42 மணிக்கு காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100க்கு கால் செய்யப்பட்டு உடனடி தகவலை பரிமாற்றி விட்டோம்.

அதன் பிறகு காலை 10.09 மணிக்கு காவல் உளவு பிரிவு அதிகாரிக்கு தகவலை தெரிவித்தும் காலை 11.47 மணிக்கு உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் பேசியும் இந்த சம்பவம் தொடர்பாக பலமுறை உள்ளூர் காவல்துறை அதிகாரியிடம் பேசிக் கொண்டும் இருந்தோம். மாலை 5.39 மணிக்கு உளவுத்துறை DSP அவர்களும் எங்களை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார்.

நாங்கள் சென்ற சாலையில் எந்தவித தடுப்புகளும் இன்றி சாலை சீராக இருந்தது. சேலம் To சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தும் கூட மிக வேகமாக வந்து எங்களுடைய வாகனத்தில் மாருதி சுசுக்கி வாகன மோதியது சம்பவ இடத்தில் நாங்கள் பார்க்கும் பொழுது எதிரில் வந்த வாகனத்திற்கு பதிவு எண் போர்ட் இல்லை, இரண்டு இஸ்லாமியர்கள் மட்டும் வாகனத்தில் இருந்தனர். காவல்துறை தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என்று தெரியப்படுத்திய உடன் உடனடியாக சம்பவத்தை விட்டு அவர்கள் நகர்ந்து விட்டார்கள். சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்தும் எந்தவித தகவலையும் காவல்துறை தெரிவிக்காததால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது. மாநாட்டு மேடையில் மதுரை ஆதீனம் குரு மகா சந்நிதானம், இது சதியாக இருக்கும் என்று பேசிய உடனே மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டது.

சம்பவம் தொடர்பான உண்மைத்தன்மை அறிக்கையை காவல்துறை மே.03 அன்று இரவு வெளியிட்டது. எங்களை பற்றியும் எங்கள் தரப்பு வாகனத்தைப் பற்றியும் முழு விவரங்களை தெளிவாக காவல்துறை அறிவித்தது. எதிர்த்தரப்பு வாகனத்தை பற்றியும் அவருடைய விவரங்கள் பற்றியும் தடுப்புகளைத் தாண்டி அவர்கள் மோதியதை பற்றியும் பதிவு எண் பொருத்தப்படாத வாகனமாக நாங்கள் குற்றம் சாட்டியத்தை பற்றியும் ஒரு இடத்தில் கூட காவல் துறை பதிவு செய்யப்படாது வருத்தம் அளிக்கிறது.

முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து எங்களிடம் அளித்த நகலை பார்த்தோம். மே.02 அன்று நடந்த விபத்திற்கு நேற்று(மே..04) அன்று முபாரக் அலி என்பவர் புகார் அளித்ததாகவும் அதன் அடிப்படையில் இரு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அறிந்தோம். அவசர அழைப்பு 100-க்கு கால் செய்து முறையாக முதலில் பதிவு செய்தது நாங்கள். ஆனால் காவல்துறையிடம் எந்தவித புகார் மதுரை ஆதீனம் சார்பாக பெறப்படவில்லை என்பது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது.

15க்கு மேற்பட்ட முறை காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி இது பற்றியன விளக்கங்களைக் கேட்டு அறிந்தும் கூட முழு தவறு மதுரை ஆதீனம் பக்கம் தான் இருக்கிறது என்பது போல தோற்றம் உருவாகியுள்ளது வேதனை அளிக்கிறது. அந்த மாருதி சுசுகி வாகனத்தில் இருவர் மட்டுமே பிரயாணம் செய்து வந்தார்கள். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் குடும்பத்தோடு சென்றோம் என்ற தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியதனை மறைக்கும் வண்ணம் சீராக இருந்த சாலையில் பயணித்த நாங்கள்தான் விபத்து ஏற்படுத்தி விட்டோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. விபத்து நடந்த அடுத்த நிமிடமே காவல்துறையிடம் முறையாக தகவல் தெரிவித்து தொடர்ந்து அதைப் பற்றி விவரத்தை தெரிந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். காவல்துறை எதிர் தரப்பினர் பற்றி விவரத்தை தொடர்ந்து எங்களுக்கு அளிப்பதை மறுத்து வந்தது சந்தேகத்துக்கிடமானது.

மீண்டும் எதிர் தரப்பில் இருவர் மட்டும் பயணித்து வந்த வாகனத்தில் குடும்பத்தோடு பயணம் செய்து வந்த வாகனம் என்று சொல்லி இருப்பது மேலும் வேதனை அளிக்கிறது. முன்னுக்கு பின் முரண்பாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக நாங்கள் கருத்துகிறோம்"

இவ்வாறு மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

Tags :
car accidentfirMaduraiAdheenamPoliceUlundurpet
Advertisement
Next Article