Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திமுகவினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை.." - இபிஎஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை உள்ளது இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
03:14 PM Nov 22, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை உள்ளது இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement

விழுப்புரத்தில் பெண் ஒருவர் தொடர் பாலியல் வன்கொடுகைக்கு ஆளான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது,

"விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. "காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி" எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதலமைச்சர்? அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த முடியாத தலைவராக தான் முதலமைச்சர் இருக்கிறார்.

தன் கட்சி நிர்வாகிகளை ஒடுக்க முடியாத முதலமைச்சர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்? உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAIADMKDMKedappadi palaniswamiEPSMK StalinTN Govt
Advertisement
Next Article